"வருது வருது... ஆ விருது விருது..." என்று வருஷம் முழுக்க பாடிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இசைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது கிடைத்திருக்கிறது இவருக்கு. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விருது தனக்கு கிடைக்க கூடும் என்று கூறியிருந்தார் அவர். நினைத்த மாதிரியே கிடைத்துவிட்டது.
ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்த அதே ஸ்லம் டாக் மிலியனர் படம்தான் இந்த விருதுகளையும் பெற்று தந்திருக்கிறது. ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காகவும், அப்பாடலை எழுதிய குல்சாருடன் இணைந்து ஒரு விருதும் என இரண்டு கிராமி விருது பெற்றிருக்கும் ரஹ்மானின் சந்தோஷம் இந்த வருடம் முழுக்க தொடரும் போலிருக்கிறது. இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் ரஹ்மான். இறக்கை கட்டி பறக்குதடா தமிழனோட மனசு...
No comments:
Post a Comment