Monday, November 1, 2010


A “must read” email.

Just see what British thought of India and how they managed to rule us.

plz don't forget to read the letter in the end

Just read what INDIA was as per LORD MACAULAY on his statement on 2nd February 1835, in the last snap. That would really shock us Old Photographs from Indian History. Please Read the last Article Carefully

The daughter of an Indian maharajah seated on a panther she shot, sometime during 1920s.


A British man gets a pedicure from an Indian servant.




The Grand Trunk Road , built by Sher Shah Suri, was the main trade route from Calcutta to Kab ul .



A group of Dancing or notch girls began performing with their elaborate costumes and jewelry.



A rare view of the President's palace and the Parliament building in New Delhi .


Women gather at a party in Mumbai ( Bombay ) in 1910.


A group from Vaishnava, a sect founded by a Hindu mystic. His followers are called Gosvami-maharajahs


An aerial view of Jama Masjid mosque in Delhi , built between 1650 and 1658.


The Imperial Airways 'Hanno' Hadley Page passenger airplane carries the England to India air mail, stopping in Sharjah to refuel.

See what the India was at 1835.......

Read this carefully



But now
JAn Indian owns Britain's East India Company - Another circle got completed.


cid:image001.jpg@01CB07D0.5C479C20

The East India Company which ruled India for more than 200 years is now ruled by an Indian Sanjiv Mehta who took over the company for $150 lac.
He said” at an emotional level as an Indian, when you think with your heart as I do, I had this huge feeling of redemption - this indescribable feeling of owning a company that once owned us”


But media is not interested in such great news. They were busy in useless Sania and Shoaib’s marriage Let us be the media…&..Fwd this mail to all Indians...
Sanjiv Mehta, CEO of The East India Company


Just think………???????????????????????


Monday, March 29, 2010

அங்காடித் தெரு – தமிழ் சினிமாவின் மிக தைரியமான படம்!



அங்காடித் தெரு – தமிழ் சினிமாவின் மிக தைரியமான படம்!

டிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்

வசனம்: ஜெயமோகன்

படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்

இசை: விஜய் ஆண்டனி – ஜிவி பிரகாஷ்

பின்னணி இசை: விஜய் ஆன்டனி

பாடல்கள்: நா முத்துக்குமார்

மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு

எழுத்து – இயக்கம்: ஜி வசந்தபாலன்

தயாரிப்பு: கே கருணாமூர்த்தி – சி அருண்பாண்டியன்

துயரத்துக்கு வாழ்க்கைப்பட்டு அங்காடித் தெருக்களில் பல நூறு கால்களில் மிதிபட்டாலும், நம்பிக்கை என்ற சின்ன நூலையே கயிறாகக் கட்டி மேலே எழுந்து நிற்க முயலும் சாமானிய மக்களின் கதை இது.

கோடம்பாக்கத்தில் நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். பாடம் சொல்கிறேன் என்று கழுத்தறுக்கிறார்கள். ஆனால் மிகச் சிலர்தான் மக்களுக்கான படத்தை, மனித நேயத்தோடு படமாக்குகிறார்கள். அவர்களில் ஒருவர் வசந்தபாலன்.

பெரும் அலங்காரங்களுடன் கம்பீரமாய் நிற்கும் வணிக நிறுவனங்களும் அதன் உள்ளார்ந்த பிரமிப்புகளையும் மட்டும் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அந்த ஜொலிப்பின் பின்னிருளில் குப்பையாய் குவிந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான மனித உடல்களை நாம் அறிவதே இல்லை. பத்திரிகைச் செய்திகளாக அவை வந்தாலும் ஒரு நாள் கழிந்தது என்று தூக்கிப் போடும் நம் அலட்சியத்தின் மீது விழுந்த சவுக்கடிதான் இந்த அங்காடித் தெரு.

தமிழ் சினிமாவில் வந்த மிகச் சிறந்த படங்களுள் ஒன்று என்ற சம்பிரதாய வார்த்தையைத் தாண்டி, துணிச்சல் மிக்க முயற்சிகளின் சிகரம் என்று மெச்சிக் கொள்ளும்படியான படமும் கூட (ஐங்கரன்காரர்கள் குப்பை படங்களை முதலில் விட்டு, இப்போது தரமான படங்களால் கோடம்பாக்கத்துக்கு தோரணம் கட்டுகிறார்கள்!).

தெற்கத்திய கிராமம் ஒன்றில் வறுமையின் அத்தனை குரூரங்களையும் போகிறபோக்கில் நெட்டித் தள்ளிவிட்டு சந்தோஷமாக வளைய வரும் ப்ளஸ் டூ இளைஞர்கள் ஜோதி, பாண்டி (மகேஷ், பிளாக் பாண்டி). ரிசல்ட் வரும் நாளன்று விபத்தில் தந்தையைப் பறிகொடுக்கிறான் ஜோதி. பள்ளியிலேயே முதல் மதிப்பெண்களுடன் தேறியும், வறுமை ஜோதியை சென்னைக்கு விரட்டுகிறது, ஒரு பெரிய கடையில் வேலைக்காரனாய். அவனுடனே வருகிறான் நண்பன் பாண்டியும்.

துணிகள், பாத்திரங்கள், பலசரக்குகளோடு மனிதத்தையும் சேர்த்தே விற்றுக் காசாக்கும் அந்தக் கடையின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரளும் அவர்கள், அடுத்தடுத்து அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள். வாழ வேறு வழியில்லாதவர்களால் அதிகபட்சம் இவ்வளவுதான் யோசிக்க முடியும். அடுத்து மறுபேச்சில்லாமல் அந்த நரகத்துக்குள் வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

அப்போதுதான் சேர்மக்கனி, சோஃபி உள்ளிட்டவர்களைச் சந்திக்கிறார்கள். அதே கடையில், அதே போன்ற துன்பங்களைச் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண்கள் இவர்கள். ஆரம்பத்தில் மோதிக் கொள்கிறார்கள். தன்னை மாட்டிவிட்ட கனியை பழிவாங்க அவளை கருங்காலி (ஏ வெங்கடேஷ்)யிடம் காட்டிக் கொடுக்க, அவன் கனியை மறைவாகக் கூட்டிப் போய் தண்டனை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் செய்கிறான் (‘மாரைக் கசக்கிறான்… வேற வழியில்லை. பொறுத்துக்கிட்டேன்’).

இதில் கலங்கிப் போகும் ஜோதி, அதன் பிறகு கனியுடன் நேசம் பாராட்ட, அந்த நேசம் இயலாமையில் உழலும் இரண்டு இளம் மனங்களின் பற்றுதலாக மாறுகிறது.

இந்த நேரத்தில் உடன் வேலை பார்க்கும் சௌந்தரபாண்டி – ராணி இருவரும் காதலித்து, அது கருங்காலிக்குத் தெரியவர, அடுத்து நடப்பது நெஞ்சை உறைய வைக்கும் நிஜம். இவர்களுக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகு கனியை விட்டு விலக நினைக்கிறான் ஜோதி. ஆனால் சின்ன ஊடலுக்குப் பின் சேருகிறார்கள். இந்தக் காதலும் ஒரு நாள் தெரிய வருகிறது கருங்காலிக்கும் கடை முதலாளி அண்ணாச்சிக்கும் (பழ கருப்பையா).

அடுத்து நடப்பதெல்லாம், ‘நாம் வாழும் நாகரீக சென்னையிலா இந்தக் கொடுமையெல்லாம் நாளும் அரங்கேறுகின்றன… பளபளக்கும் இந்த மலிவு விலைக் கடைகளிலா இத்தனை பயங்கரங்களும் நாளும் நடக்கின்றன’ என நெஞ்சைப் பதற வைக்கிறது.

அவற்றிலிருந்து தப்பித்து வாழ்க்கையை எப்படி அதன் போக்கில் வாழ்கிறார்கள் இந்த விளிம்பு மனிதர்கள் என்பது படத்தின் இறுதிப் பகுதி. நிச்சயம் இது க்ளைமாக்ஸ் அல்ல… உலகிலிருந்து துரத்தியடிக்கப் பார்க்கும் வாழ்க்கையை, திரும்பி நின்று முறைத்து, வலிகளைத் தாங்கி வாழும் முயற்சியின் தொடர்ச்சி…

இது கதையல்ல… நாம் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் பல நிஜங்களின் தொகுப்பு.

எல்லையைத் தாண்டித்தான் தீவிரவாதிகள் வரவேண்டும் என்பதோ, அவர்கள் குண்டு வைத்தால்தான் நாடு சீரழிந்து போகும் என்பதோ உண்மையல்ல.. நாட்டுக்குள்ளேயே பள பள சட்டைகளில் பவிசாக வலம் வந்தபடி, சட்டத்தையும் ஆட்சியையும் தனது கரன்சியால் அடித்து வாழும் அண்ணாச்சிகளும், அவர்களிடம் மாமூல் வாங்கும் காவலர்களும் கூட பல மடங்கு ஆபத்து மிகுந்த தீவிரவாதிகளே.

இந்த உண்மையை ஒரு புலனாய்வு நிருபரின் துணிச்சலோடும், மனிதம் மீது தீராக் காதல் கொண்ட ஒரு நியாயவானின் கோபத்துடனும் படமாக்கியிருக்கும் வசந்த பாலனை தமிழ்சினிமா உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டும்!

ஒரு நல்ல கலைஞன் சமூகத்துக்கு செய்ய வேண்டிய பங்களிப்பு இதுவே!

நிகழ்வுகளை அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் எல்லாமே சினிமா மீதான வசந்த பாலனின் நேசத்தைச் சொல்லுகின்றன.

அவரது உணர்வுகளை கச்சிதமாக வார்த்தைகளில் வடித்துள்ளவர் ஜெயமோகன். காதலன் மீது கொண்ட கோபத்துக்கு கனி சொல்லும் விளக்கம்: “இவன் ஒருத்தன்கிட்டேயாவது மானம் ரோஷத்தோட இருக்கிறேனே”…,

விபச்சாரத்திலிருந்து மீண்டு குடும்பப் பெண்ணாக மாறியவள் தனது குட்டையான கணவனைப் போலவே குழந்தை பிறந்ததற்கு இப்படிச் சொல்லி மகிழ்கிறாள்: “இனி யாரும் இந்தப் பிள்ளையை எவனுக்குப் பெத்தாளோன்னு சொல்ல மாட்டாங்களே”

-தனது உணர்வு யாருக்கும் தாழ்ந்ததல்ல, தானும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மனிதனின் அடிமன உணர்வாக ஜொலிக்கின்றன வசனங்கள்.

மூன்று வேளை சாப்பாட்டுக்கும் எட்டு மணி நேர தூக்கத்துக்கும்தான் மனிதன் இந்த பாடுபடுகிறான். ஆனால் அதைப் பெற அந்த இளைஞர்கள் படும் கொடுமை இருக்கிறதே… எழுத்துக்கும் அப்பாற்பட்ட கோரம் அவை.

தங்கை அகாலத்தில் வயதுக்கு வந்துவிட்டாள்.. அந்தப் பெண்ணை நாயினும் கேவலமாக ஒரு குப்பைத் தொட்டி போன்ற இடத்தில் வீசி எறிகிறாள் அவளது ‘ஆச்சார’ எஜமானி. உதவிக்கு யாருமில்லை.. ஆனால் சடங்கு செய்தாக வேண்டும் என்று தவிப்பில், தன் கையறு நிலையை எண்ணி நடுத்தெருவில் அந்தப் பெண் கலங்குவதும், வழியில் அம்மன் கோயிலில் இருக்கும் தாய்மார்கள் விஷயமறிந்து ஆறுதலாக அணைத்து அம்மனுக்கு எதிரிலேயே அத்தனை ஆதரவுடன் சொந்தங்களாய் நின்று சடங்கு செய்வதும்… படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நெகிழ்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பு என கண்களை நிறைத்தது.

அவதாரத்தில் அம்மன் என்றாலும் உலகாளும் தாய்க்கு முன் தீட்டு என்ன இருக்கிறது? என்று திருப்பிக் கேட்கும் காட்சி இது. மாடி வீடுகளிலும், ‘மடி – ஆச்சார’ மனிதர்களிடமும் இல்லாத மனிதம், மரத்தடியில் உள்ள அம்மன் கோயிலில் இருக்கிறது பார் என்று நடுமண்டையில் நச்சென்று குட்டும் காட்சி இது!

வசந்த பாலன் - இயக்குநர்

மகேஷை ஒரு புதுமுகமாக நினைக்க முடியவில்லை. அண்ணாச்சி கடைப் பையன்களின் மொத்த வலியையும் உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பான எதிர்காலம் உண்டு, அடை மொழிகளுக்குள்ளும் வெட்டி பந்தாக்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால்.

இதனை தனது முதல் படம் என்றே தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம் அஞ்சலி. நமக்கு வெகு நாட்களாகப் பழக்கப்பட்ட முகம் மாதிரி அத்தனை இயல்பான நடிப்பு.

அண்ணாச்சியாக வரும் பழ கருப்பையா, அவரது கைத்தடியாக வரும் ஏ வெங்கடேஷ் இருவருமே மிரட்டியுள்ளனர். சினேகாவை பொருத்தமாகப் பயன்படுத்தி படத்துக்கு நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளார் இயக்குநர்.

விஜய் ஆண்டனியின் இசையில் வரும் ‘அவள் அப்படி ஒன்றும் அழகாயில்லை…’ மனதை அள்ளுகிறது. எளிய இனிய சந்தம்… பாடல் வரிகள். பின்னணி இசையில் மனதை அறுக்கிறார். இன்னொரு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் இருந்தாலும் அவர் இசையமைத்துள்ள பாடல்கள் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் மாதிரிதான் வருகின்றன.

ரிச்சர்டின் ஒளிப்பதிவு அத்தனை எதார்த்தம். தேரிக் காடுகளையும் ரங்கநாதன் தெருவையும் அவற்றின் இயல்பு மாறாமல் காட்டியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கூட சில காட்சிகளில் கத்தரி வைத்திருக்கலாம்.

இடைவேளைக்குப் பின் தொடர்ந்து சோகம் சோகம் சோகம் என காட்சிகளின் கனம் மனதை அழுத்துகிறது. அதுவே ஒருகட்டத்தில் மனதைக் களைப்புற வைக்கிறது. இரண்டு மணி நேரம் ஒரு சோக வாழ்க்கையைப் பார்க்கும் நமக்கே இப்படி என்றால்… அதை நித்தம் அனுபவிக்கும் அந்த இளைஞர்களின் நிலை…?

இந்தப் படத்துக்குப் பிறகாவது அண்ணாச்சிகள், தங்கள் கடை ஊழியர்களை மனிதர்களாக மதித்து நடத்தினால், அதுதான் வசந்தபாலன் என்ற சமூக அக்கறை மிக்க ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் பெரும் விருதும் மரியாதையும். அதை விட்டுவிட்டு மான நஷ்ட வழக்கு என்று மல்லுக்கட்ட முயன்றால்… அவர்களை மனிதகுலம் மன்னிக்காது!

வாழ்த்துக்கள் வசந்த பாலன்!

Thanks : envazhi.com

Monday, February 1, 2010

கிராமி விருது வென்றார் ரஹ்மான்!

"வருது வருது... ஆ விருது விருது..." என்று வருஷம் முழுக்க பாடிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இசைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது கிடைத்திருக்கிறது இவருக்கு. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விருது தனக்கு கிடைக்க கூடும் என்று கூறியிருந்தார் அவர். நினைத்த மாதிரியே கிடைத்துவிட்டது.

ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்த அதே ஸ்லம் டாக் மிலியனர் படம்தான் இந்த விருதுகளையும் பெற்று தந்திருக்கிறது. ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காகவும், அப்பாடலை எழுதிய குல்சாருடன் இணைந்து ஒரு விருதும் என இரண்டு கிராமி விருது பெற்றிருக்கும் ரஹ்மானின் சந்தோஷம் இந்த வருடம் முழுக்க தொடரும் போலிருக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் ரஹ்மான். இறக்கை கட்டி பறக்குதடா தமிழனோட மனசு...

Tuesday, January 26, 2010

குட்டி

குட்டி

மனசுல 'குட்டி'யூண்டு இடம் கூட தேவையில்லை. என் ஒன் சைட் லவ்வை ஃபீல் பண்ணா போதும்! இப்படி தான் விரும்பும் பெண்ணிடம் தீர்மானமாக சொல்லும் காதலன்! அடித்து, துவைத்து, துடிக்க துடிக்க தொங்கப் போட்ட தமிழ்சினிமாவின் 'முக்கோண' காதலில் இது வேற ரகம்!

ஸ்ரேயாவுக்கும் சமீர் தத்தானிக்கும் லவ். கிட்டதட்ட வன்முறை மூலம் மடக்கிப் போட்ட இந்த லவ்வை, சமீர் முழுசாக ஃபீல் பண்ண விடாமல் குறுக்கே வருகிறார் அதே கல்லு£ரியில் படிக்கும் தனுஷ். நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுங்க பாஸ். நானும் ஓரமா நின்னு லவ் பண்ணிக்கிறேன் என்ற இவரது தத்துவம், சர்ர்ர்ரியான தத்துபித்துவம். தனது காதலிக்கு என்ன பிடிக்குதோ, அதை செய்து தருவது என் கடமை என்று அவளுக்கு பிடித்த காதலனை அவனோடு சேர்த்து வைக்க துடிக்கும் இந்த கீழ்பாக்க கேஸ், அடிக்கிற லு£ட்டிகள் அத்தனையும் ஜாலி பட்டாசு. காலி டம்ளரில் கல் வீசி, அது கரெக்டாக விழுந்தால் காதல் செட் ஆகும் என்ற புதிய ஜோதிடத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இனி ஆங்காங்கே கல் பறக்கக்கூடும்.

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, அப்புறம் என்னை கண்டு ஏன் பயப்படுறே?" என்று ஒரு கேள்வி கேட்டு ஆட்டத்தில் எப்பவும் இருக்கிற மாதிரி வழி ஏற்படுத்திக் கொள்கிறார் தனுஷ். அப்புறம் என்ன? காதலர்கள் சேர்ந்திருக்கும் போதும், பிரிந்திருக்கும் போது, லாஜிக்கோடு பிரசன்ட் ஆகிவிடுகிறார். ஜுரத்தில் கிடக்கும் ஸ்ரேயாவை பார்க்க சமீரோடு தொற்றிக் கொண்டு போகிற தனுஷ், கைவசம் எடுத்துப் போகிற ஆப்பிள் சமாச்சாரங்களை கொடுக்கிற போதும், ஸ்ரேயாவின் பர்த் டே வை ஏக பிரமாதமாக கொண்டாடுகிற போதும், 'இளசுகளை கவர இருபது டிப்ஸ்' என்று புத்தகமே போடுகிற அளவுக்கு பொளந்து கட்டுகிறார்! இவரை சுற்றி எப்பவும் இளம் பெண்கள் இருப்பது மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் பொறுத்தமாகவே இருக்கிறது அவர் செய்யும் சேஷ்டைகளும்.

வெறும் பொம்மையாக வந்து போகாமல் பொறுப்பை உணர்ந்து நடிக்கவும் செய்திருக்கிறார் ஸ்ரேயா. சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, ஏமாற்றம் என்று எல்லா உணர்ச்சிகளையும் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொண்டு ஜாலம் காட்டுகிறது அவரது கண்கள்.

எப்பவும் எரிந்து விழுகிற பணக்கார திமிரு சமீர் தத்தானி. காதலித்துவிட்டு போகட்டுமே என்பது மாதிரியே முதல் சில ரீல்களை இவர் தனுஷ§க்கு தாரை வார்த்துவிட்டு ஊருக்கு போகிறார். ஒரு காட்சியில் தனுஷ் வீசிய கல் டம்பளரில் விழாததற்கு இவர் சந்தோஷப்பட, "உன் காதல் ஜெயிக்கணும்னு நினைச்சுதான் கல்லை போட்டேன்" என்று தனுஷ் கூறுகிறாரே, செம கிளாப்ஸ் தியேட்டரில்.

கவுண்டரை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று துரு பிடித்த அருவாளால் கொத்தி எடுத்திருக்கிறார் ஸ்ரீநாத். சொந்த சரக்கை யூஸ் பண்ணுங்க பாஸ்.

'பட்டணம்தான் போகலாமடி' மெட்டை அப்படியே அடித்திருக்கும் ஒரு பாடலில் தனது திறமையை காட்டி ஆட வைக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அப்பாடலும், ஆடியிருக்கும் மேக்னா நாயுடுவும் செமஹாட் மச்சி...

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு குட்டியில்லை, பிரமாண்டம்!

ஆரம்பத்தில் இழுவை, இடையில் மிதவை, என்று ஜம்ப் அடிக்கிற திரைக்கதை. மித்ரன் ஆர் ஜவஹரின் 'மோகினி' ஆட்டம் என்று நினைத்து உள்ளே வந்தால், நன்றாக 'குட்டி' அனுப்புகிறார்கள்.

from Tamilcinema.com

ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி


மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து தனது 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, துவக்கத்தில் ரன்களை குவித்தாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
நேற்றைய ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்திருந்த வங்கதேச அணி, 4வது நாளான இன்று ஆட்டம் துவங்கியவுடன் 14 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணி உணவு இடைவேளைக்கு முன் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளை முடிந்து வந்த சில நிமிடங்களில் ஜாகீர்கானின் பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் ஜாகீர்கான் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஓஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இறங்கிய முதல் ஓவரிலேயே 2 ரன்களையும் அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2010ம் ஆண்டிற்கான ஐடியா கோப்பையையும் கைப்பற்றியது.



சச்சினுக்கு சிறப்பு விருது : வங்தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கானுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்ததற்காக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன்


from dinamalar.com

Monday, January 25, 2010

ரஜினிக்கு "ரசிகனாக" இருப்பதில் என்ன தவறு?

விமர்சனங்களை பற்றி என்றும் கவலைப்படாமல் ஒதுக்கி தள்ளும் குறிப்பிடத்தக்கவர்களுள் எனக்கு முன்மாதிரி என்றால் அது ரஜினி தான், பதிவுலகம் வந்த பிறகு தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, முதலில் மன உளைச்சலில் இருந்தாலும் பின் கிடைத்த பல அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியது..எப்போதுமே பிரச்சனைகளை கண்டு துவளாமல் அதில் இருந்தே பாடங்கள் கற்றுக்கொள்கிறேன் இதில் எப்போதும் என்னுடன் வருவது ரஜினியும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் மற்றும் விமர்சனங்களும் தான்.


பொதுவாக அனைவரும் உங்களுக்கு முன்மாதிரியாக யாரை நினைக்கிறீர்கள்? என்றால் அப்துல் கலாம் போன்ற ஒருவரையோ பல சாதனைகள் புரிந்த ஒருவரையோ குறிப்பிடுவார்கள் ஆனால் யாரும் நடிகரை குறிப்பிடமாட்டார்கள் காரணம் பலருக்கு நடிகன் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான், அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு நடிகனுக்கு ரசிகன் என்றாலே என்னவோ தீண்டத்தகாத செயலை செய்ததை போல பார்க்கப்படுகிறது அல்லது நடிகனுக்கு ரசிகனாக இல்லாமல் இருப்பது அறிவாளித்தனமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ரஜினியை போல மசாலா பட நடிகர் என்றால் சொல்லவே தேவையில்லை!

ரசிகன் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் வைத்து இருக்கிறார்கள் இதுவே பலரின் குழப்பத்திற்கு காரணம். ரசிகன் என்றாலே அவன் ஊதாரித்தனமாக இருப்பான் என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளார்கள், இப்படி ஒரு எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு எப்போதும் ரசிகன் என்பவன் தவறாகத்தான் தெரிவான். பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம், பெரும்பான்மை என்பது அதிகமாக இருக்கலாம் ஆனால் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல என்பதை புரிந்து கொண்டால் நல்லது. ரசிகன் என்றாலும் என்னுடைய குடும்ப, அலுவலக கடமைகளை நான் சரிவரவே செய்து வருகிறேன், உடன் ரஜினியையும் ஒரு ரசிகனாக ரசிக்கிறேன். இதில் என்ன தவறு? இதில் ரசிகன் என்ற முறையில் எந்த விதத்தில் மற்றவர்களிடத்தில் இருந்து குறைந்து விடுகிறேன்! அல்லது என்னைப்போல இருப்பவர்கள் குறைந்து விடுகிறார்கள்.


ரஜினி என்றாலே உடன் பல விமர்சனங்கள் வரும் அவர் அப்படி இப்படி என்று ... தெரியாமல் தான் கேட்கிறேன்..இந்த உலகில் 100% உண்மையானவர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்று கூற முடியுமா? தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா? அனைவரையும் திருப்தி படுத்த எவராலும் முடியுமா? இது கடவுளால் கூட முடியாது. அப்படி இருக்கும் போது ரஜினி என்ன செய்து விட முடியும்? அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவரவர் தவறுகள் நடக்கின்றன, நாம் தவறு செய்யவில்லை என்று கருதும் பல விஷயங்கள் நமக்கு கீழே உள்ளவர்களுக்கு பெரும் தவறாக தெரியலாம், தெரியும். பிரபலமாக இருப்பவர்கள் செய்யும் தவறு அதிலும் குறிப்பாக ரஜினியும் செய்யும் அனைத்தும் காரியங்களும் ஊடகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக்கப்படுகின்றன அல்லது மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன.


ரஜினியிடமும் பல தவறுகள் இருக்கும், இதையே ரஜினியே மறுக்க மாட்டார் மறுத்ததில்லை மறுக்கவும் முடியாது, அதற்காக ரசிகன் என்பதால் அவரின் அனைத்து செயல்களையும் ஏற்றுக்கொண்டதாக ஆகி விடுமா? நமக்கு ஏற்புடைய, நமக்கு சரி என்று படுகின்ற செயலை கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் மற்றவற்றை ஒதுக்கி விடுகிறோம். நாம் ஒருவருக்கு நண்பர் என்பதாலே அவர் என்ன செய்தாலும் சரி என்று ஏற்றுக்கொள்கிறோமா! இல்லையே! ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு நட்புடன் தானே இருக்கிறோம், அதே போல ரசிகன் என்பதால் பிடிக்காததை ஒதுக்கி விட்டு நமக்கு பிடித்த செயல்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு! இதில் என்ன கேவலம் இருக்கிறது....இப்படி நினைப்பவர்கள் எண்ணம் தான் கேவலமாக உள்ளது. பலர் ரசிகன் என்ற பெயரில் கேவலமாக நடந்து கொள்வதால் அனைவரும் அப்படித்தான் என்று நினைத்தால்.. அது யார் தவறு! என்னைப்போல இருப்பவர்கள் தவறா! அல்லது அனைத்தையும் ஒரே மாதிரி பார்ப்பவர்கள் தவறா!

நான் ரஜினிக்கு ரசிகன் என்று சொல்வதில் எனக்கு எந்த வித வருத்தமோ அவமானமோ தகுதிக்குறைவோ எதுவுமில்லை, இப்படிக்கூறுவதையே தவறாக நினைக்கிறேன். ரஜினியை ரஜினியாக மட்டுமே ரசிக்கிறேன் மற்றும் பொறுமையையும் யாரையும் குறை கூறாத பழக்கத்தையும் ரஜினியிடமே கற்றுக்கொண்டேன். இதுவரை ரஜினியை எத்தனையோ பேர் கேவலமாக விமர்சித்துள்ளார்கள் விமர்சித்துக்கொண்டுள்ளார்கள் நடிகர்கள் உட்பட. ஒருமுறையாவது ரஜினி அதற்கு திரும்ப அசிங்கமாக பதில் கூறி இருக்கிறாரா! சொல்லப்போனால் இதை போன்ற விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிடுகிறார் என்பதே உண்மை.

தன்னை திட்டியவர்களிடம் கூட பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார். தனக்கு ஒரு விஷயம், திரைப்படம், செயல் பிடித்து இருந்தால் மனம் விட்டு பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே. ரஜினி ஒரு நடிகன் என்பதால் பிரபலம் என்பதால் அவர் அனைத்து விசயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். அவரை கேள்வி கேட்பவர்கள் எவ்வளவு பேர் நேர்மையாக!! இருக்கிறார்கள்? நாம் சரியாக இருந்தால் தானே அடுத்தவரை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்க முடியும்.


முன்பெல்லாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது அல்லது அதை தாங்கக்கூடிய அளவிற்கு மனது பக்குவப்படவில்லை (இப்பவும் ஓரளவு தான்), ஆனால் ரஜினிக்கு நேர்ந்த அவமானங்களை பார்த்து இவர் எப்படி உயிரோடு இருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டு போனேன்! குசேலன் சமயத்தில் இவரை காய்ச்சிய மாதிரி யாரும் எவரையும் காய்ச்சி எடுத்து இருக்கமாட்டார்கள் (குசேலன் சமயத்தில் ரஜினி சரி செய்தது சரியா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக ஒரு இடுகையில் பதில் அளிக்கிறேன் தகுந்த (நியாயமான) காரணங்களுடன்) என்றே நம்புகிறேன், இதே வேறு ஒருவராக இருந்தால் விமர்சித்தவர்களை பற்றி எதிர் பேட்டி கொடுத்து இருப்பார் மற்றும் மற்றவரின் மேல் பழியை போட்டு தப்பித்து இருப்பார். இது எதையும் செய்யாமல் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு இந்த பிரச்னையை கடந்து வந்தார். இந்த ஒரு விஷயம் ரஜினிக்கு அனுபவத்தை கொடுத்ததோ இல்லையோ! எனக்கு அதிகளவில் மன தைரியத்தை கொடுத்தது.


ரஜினி ரசிகன் என்பதால் அவர் செய்யும் அனைத்து செயல்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், அப்படி செய்கிறவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அவர்கள் அரசியல், எழுத்து, விளையாட்டு என்று எங்கும் வியாபித்து இருப்பார்கள் அது மனித இயல்பு. கலைஞர் ஜெ செய்வது அனைத்தும் சரி என்று அவர்களது கட்சிக்காரர்கள் வாதிடுவதில்லையா! சாரு ஜெயமோகன் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் அனைத்து செயல்களுக்கும் காரணம் கூறுவதில்லையா! சச்சினை தெய்வமாக நினைத்து அவருக்காக வாதிடுவதில்லையா! அப்படி பார்த்தால் உலகம் முழுவதும் பெரும்பாலும் தனக்காக அல்லது தங்களுக்கு பிடித்த ஒருவருக்காக தவறு என்று தெரிந்தாலும் தங்கள் ஆதரவை தெரிவித்தே வருகிறார்கள். நானும் பலர் ரஜினியை விமர்சித்த போது ரஜினிக்காக பரிந்து பேசி இருக்கிறேன் அது எனக்கு ஏற்புடையதாக இருந்தால். தவறே செய்யாதவர் கூடத்தான் நண்பராக இருப்பேன்! என்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட நண்பராக இருக்க தகுதி கிடையாது. இதே விஷயம் அனைத்திற்கும் பொருந்தும்.


பொது அறிவாளிகள் மற்றும் பதிவுலக அறிவாளிகள் (பலர் பதிவுலகம் என்ற தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!) பலருக்கு ரஜினிக்கு ரசிகனாக இருந்தால் என்னவோ கேவலமான விசயமாக தெரிகிறது (தற்போது ரஜினி சீனியர் நடிகர் ஆகி விட்டதாலும் புதிய நடிகர்கள் வரவாலும் தற்போது இது குறைந்துள்ளது). எனக்கு புரியவில்லை மசாலா பட நடிகர் என்பதால் ரஜினி எந்த விசயத்தில் குறைந்து விட்டார்! என்னை போல பலருக்கு அவரது படங்கள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இருக்கிறார், அவரது போலித்தனம் இல்லாத எளிமையான நடவடிக்கைகள் அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது, மற்றவர்களை சின்ன வயதினராக இருந்தாலும் மனம் விட்டு பாராட்டும் நல்ல மனசு பிடித்து இருக்கிறது. மற்றவர்களை பற்றி என்றும் குறை கூறாத பெரிய மனது பிடித்து இருக்கிறது. உலக அரங்கில் ஹிந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்கள் என்று நினைத்துகொண்டு இருந்தவர்களுக்கு தனது படத்தின் மூலம் மற்றவர்களை தமிழ் திரையுலகை நோக்கி திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தென் மாநிலங்கள் என்றாலே இளக்காரமாய் நினைக்கும் வடமாநில சேனல்களை தனது ஒரு பேட்டிக்காக இன்னமும் எதிர்பார்க்க வைக்கிறவர். இதை போல் பல விசயங்களை கூறலாம்..இப்படிப்பட்ட ஒருவருக்கு (நடிகருக்கு) ரசிகராக இருப்பதில் எனக்கு பெருமையே!


பொதுவாக திரை ரசிகர்களிடம் வைக்கப்படும் குற்றச்சாட்டு "போய் முதல்ல குடும்பத்தை கவனிங்கப்பா" என்பது தான்..என்னவோ ரசிகனாக இருப்பதால் எல்லோரும் நடிகரை கட்டிக்கொண்டு அழுவது போலவும் மற்ற வேலைகள் எதுவுமே செய்யாதது போலவும், குடும்பத்தை கவனிக்காதது போலவும், வெட்டித்தனமாக திரிவது போலவும், 24 மணி நேரமும் திரையரங்கிலே கிடப்பது போலவும் தாங்கள் ரொம்ப ஒழுங்காக இருப்பது போலவும் "நினைத்துக்கொண்டுள்ளார்கள்". யப்பா! ராசாக்களா எப்படிப்பா உங்களால முடியுது! இதைப்போல பேசுபவர்கள் வாதமே இது தான். இதைப்போல செய்பவர்கள் இருக்கிறார்கள் மறுக்கவில்லை அதற்காக இதைப்போலவே இருப்பவர்கள் தான் அனைவரும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் எப்படி என்பதில் அவரவர் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறதே தவிர நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதில் இல்லை. இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். கண்ணா! நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.

பிறந்த நாள் காணும் ஜினிக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


பொதுவாக ரஜினியை கோபக்கார நடிகராகத்தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் அமைதியான கதாப்பாத்திரத்தில் அழகிய ரொமான்ஸ் காட்சிகளில் வாய்ப்பு கிடைத்தால் பட்டயகிளப்புவேன் என்று நிரூபித்த படங்களில் "ஜானி"யும் ஒன்று. இதில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் கூறுவார் ஆனால் ரஜினி தன் நிலை கருதி மறுத்து விடுவார், ஆனால் "நான் பாட்டு பாடுகிறவள் என்பதால் தானே இப்படி கூறுகிறீர்கள்" என்று ஸ்ரீதேவி அழுவதும் அவரை ரஜினி சமாதானப்படுத்தி தன் காதலை தெரிவிப்பார். கண்ணியமாக காதலை வெளிப்படுத்திய காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால் இயக்குனர் மகேந்திரன் எடுத்த இந்த காட்சி மிக முக்கிய இடம் பிடிக்கும். ரஜினி "அதற்குள் என்னை தவறா நினைத்து விட்டீர்களே! ஏன் அப்படி எல்லாம் பேசினீங்க" என்று கேட்க..அதற்கு ஸ்ரீதேவி "நான் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறுவதும் அதற்கு ரஜினி தன் ஸ்டைலில் வேகமாக ஏன்! ஏன்! என்று கேட்க அது அப்படித்தான் என்பது போல ஸ்ரீதேவி உதட்டை குவித்து தலையாட்டுவது..வாவ்! அருமையான இயல்பான காட்சி..உடன் இளையராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை.

Tuesday, January 19, 2010

சிதம்பரம் அரசு மருத்துவமனை




சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வாகனத்தை நிறுத்தத்தால் ஆம்புலன்ஸ் நிறுத்தமுடியவில்லை. மக்கள் தான் திருந்த வேண்டும். எதற்கும் அரசா பொறுப்பு!